ஆற்றில் விழுந்தது மினி பஸ் உத்தரகண்டில் 14 பேர் பலி
ஆற்றில் விழுந்தது மினி பஸ் உத்தரகண்டில் 14 பேர் பலி
ஆற்றில் விழுந்தது மினி பஸ் உத்தரகண்டில் 14 பேர் பலி
ADDED : ஜூன் 16, 2024 01:30 AM
ருத்ரபிரயாக், உத்தரகண்டில் 23 பயணியருடன் சென்ற மினி பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், 13 பயணியர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மற்றும் டில்லியில் இருந்து 23 பயணியரை ஏற்றிக்கொண்டு உத்தர கண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சோப்தா துங்நாத் பகுதிக்கு மினி பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மினி பஸ் 100 அடி பள்ளத்தில் உள்ள அலகானந்தா ஆற்றில் கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அங்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாருடன் விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் 14 பயணியர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஹெலிகாப்டர் வாயிலாக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் பற்றி அறிந்த உத்ரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.