ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் நாளை ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 02, 2024 05:50 AM
பெங்களூரு: கர்நாடக மேலவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடக்கவுள்ளது.
மேலவையில் விரைவில் காலியாக உள்ள 11 உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள். வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் திட்டங்கள் வகுப்பது குறித்து, ஆலோசனை நடத்த நாளை ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது.
பெங்களூரின், விதான்சவுதாவில் ம.ஜ.த., அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணிக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை நடக்கும்.
மேலவையின் ஒரு இடத்தில், ம.ஜ.த., போட்டியிடுகிறது. ஜவராயகவுடா வேட்பாளராவது, பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
மேலவை தேர்தல், லோக்சபா தேர்தல் முடிவு வெளியாவது, கட்சியை பலப்படுத்துவது, அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல்கள் என, பல்வேறு விஷயங்கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என, ம.ஜ.த., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.