ADDED : ஜூலை 17, 2024 01:11 AM

அனுமதிக்க முடியாது!
கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டினை பிடுங்கி அதை முஸ்லிம்களுக்கு தந்துவிட்டது காங்கிரஸ். ஹரியானாவில் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நடக்கும். ஹரியானாவில் பா.ஜ., முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும். முஸ்லிம் இடஒதுக்கீட்டை அனுமதிக்காது.
அமித் ஷா
மத்திய அமைச்சர், பா.ஜ.,
காஷ்மீர் கொள்கை தோல்வி!
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறுகிறது. காஷ்மீரி பண்டிட்கள் மீண்டும் குடியேறவில்லை. எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.
சவுரவ் பரத்வாஜ்
டில்லி அமைச்சர், ஆம் ஆத்மி
டி.ஜி.பி.,யை நீக்குங்கள்!
காஷ்மீரின் தோடாவில் ராணுவ கேப்டன் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 32 மாதங்களில், 50 வீரர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். தாக்குதலை தடுக்க தவறிய டி.ஜி.பி., - ஆர்.ஆர்.ஸ்வைனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி