நீட் கவுன்சிலிங் ஆக., 14ல் துவக்கம்
நீட் கவுன்சிலிங் ஆக., 14ல் துவக்கம்
நீட் கவுன்சிலிங் ஆக., 14ல் துவக்கம்
UPDATED : ஜூலை 30, 2024 10:43 AM
ADDED : ஜூலை 30, 2024 06:34 AM

புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் கவுன்சிலிங், வரும் 14ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, மே 5ல் நடந்தது; முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகின. மொத்தம், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்தக் கோரியும், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், 'சில இடங்களில் நடந்த முறைகேடுகளுக்காக நாடு முழுதும் நடந்த தேர்வை ரத்து செய்ய முடியாது. மறு தேர்வு நடத்தவும் உத்தரவிட முடியாது' என்றது.
இந்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 14 முதல் கவுன்சிலிங் துவங்கும் என, எம்.சி.சி., எனப்படும், தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல், எம்.சி.சி., இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.