குடிநீர் வினியோகிக்கும் முன் பரிசோதனை செய்ய உத்தரவு
குடிநீர் வினியோகிக்கும் முன் பரிசோதனை செய்ய உத்தரவு
குடிநீர் வினியோகிக்கும் முன் பரிசோதனை செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 05:54 AM

மைசூரு: ''பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் முன்பு, அவ்வப்போது தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும்,'' என, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மைசூரில் அசுத்த நீர் குடித்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நேற்று மாவட்ட பஞ்சாயத்து அரங்கில், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா கூட்டம் நடத்தினார்.
அவர் பேசியதாவது:
குடிநீரில் அசுத்தமான நீர், சேராமல் கவனமாக இருங்கள். பொதுமக்களுக்கு வினியோகிக்கும் டேங்கர்களை, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகளை சுற்றிலும், கான்கிரீட் தடுப்பணை கட்ட தேவையான நடவடிக்கை எடுங்கள்.
சோதனை செய்யாமல், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தலைவர் பொறுப்பேற்க வேண்டும்.
கிராமப்புறங்களில் பாதாள சாக்கடைகள் சரியாக உள்ளதா என்பதை மேற்பார்வையிட வேண்டும். ஹோட்டல், சாலையோர உணவகங்களில் சுத்தம் பராமரிப்பை கண்காணியுங்கள். வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா பரவாமல், சுகாதார துறையுடன் மற்ற துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
நகர பகுதிகளில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் வினியோகம் தரம் தொடர்பாக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுடன் கலெக்டர் கூட்டம் நடத்தினார். இடம்: மைசூரு.