ராஜினாமாவா? மணிப்பூர் முதல்வர் விளக்கம்
ராஜினாமாவா? மணிப்பூர் முதல்வர் விளக்கம்
ராஜினாமாவா? மணிப்பூர் முதல்வர் விளக்கம்
ADDED : ஜூலை 01, 2024 11:58 PM

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினருக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது.
இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில், 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இருப்பினும் தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, முதல்வர் பைரேன் சிங் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மாநிலம் முழுதும் தகவல் பரவியது.
இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தில் நிலவும் சூழலை வைத்து எதிர்க்கட்சிகள் பரப்பும் ஆதாரமற்ற செய்தி இது. இது போன்ற தவறான செய்திகள் வெளியிடுவது, சிலருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஊடகங்கள் எந்த ஒரு செய்தியையும் நம்பாமல் உண்மையை சரிபார்த்து வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.