சட்டவிரோத கருக்கலைப்பு குறித்து தகவல் தந்தால் பரிசு
சட்டவிரோத கருக்கலைப்பு குறித்து தகவல் தந்தால் பரிசு
சட்டவிரோத கருக்கலைப்பு குறித்து தகவல் தந்தால் பரிசு
ADDED : ஜூன் 23, 2024 06:28 AM
பெங்களூரு: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வோரை பற்றி தகவல் கூறினால் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு அளிப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
பிரசவத்துக்கு முன், கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிப்பது, சட்டப்படி குற்றமாகும்.
கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு நடக்கிறது.
சில நர்ஸ்கள், தங்கள் வீடுகளில் திருட்டுத்தனமான கருக்கலைப்பு செய்து, போலீசாரிடம் சிக்கினர். மருத்துவமனைகள் உட்பட எந்த இடத்தில் இத்தகைய செயல்கள் நடந்தாலும், போலீசாருக்கோ, சுகாதாரத் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்று, தகவல் கூறுவோருக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசளிக்கப்படும். தகவல் கூறுவோரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.