தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா வாழ்த்து
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா வாழ்த்து
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா வாழ்த்து
ADDED : ஜூன் 02, 2024 11:59 AM

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இன்று (ஜூன் 02) தெலுங்கானா மாநில உருவான நாளை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் சோனியா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், தெலுங்கானா மாநில மக்கள் எனக்கு மிகுந்த மரியாதையையும், அன்பையும் கொடுத்துள்ளனர். வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாக்க, ஆட்சி அதிகார பொறுப்பை மக்கள் எங்கள் கட்சியிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
உத்தரவாதம்
இவை அனைத்தையும் நிறைவேற்றுவது எனது கடமையாக கருதுகிறேன். இந்த புனித நாளில், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் எந்தக் கல்லையும் விட்டு வைக்காது என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு சோனியா பேசினார்.