நன்றி கடன் செலுத்தும் மத்திய அமைச்சர் முதல்வர் சித்தராமையா 'கிண்டல்' கேள்வி
நன்றி கடன் செலுத்தும் மத்திய அமைச்சர் முதல்வர் சித்தராமையா 'கிண்டல்' கேள்வி
நன்றி கடன் செலுத்தும் மத்திய அமைச்சர் முதல்வர் சித்தராமையா 'கிண்டல்' கேள்வி
ADDED : ஜூலை 30, 2024 07:40 AM

மைசூரு: கர்நாடகாவுக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கர்நாடகாவுக்கு 'நன்றி கடன்' செலுத்த வேண்டாமா?'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோரின் குற்றச்சாட்டுக்கு, மைசூரில் நேற்று முதல்வர் சித்தராமையா பதிலளித்து கூறியதாவது:
'நிடி ஆயோக்' கூட்டத்தில், நான் வேண்டுமென்றே பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர். எங்களுடன் பா.ஜ., அல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளும் புறக்கணித்துள்ளன. அரசுக்கு நீதி கிடைக்காதபோது, அந்த கூட்டத்துக்கு சென்று என்ன பயன்?
நன்றி கடன்
கர்நாடகாவுக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார். இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கர்நாடகாவுக்கு 'நன்றி கடன்' செலுத்த வேண்டாமா?
பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தோம். அதற்கான மானியம் வழங்கப்படவில்லை. கர்நாடகாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது அநியாயம் இல்லை என்றால், வேறென்ன என்று சொல்வது?
15வது நிடி ஆயோக் கூட்டத்தில், கர்நாடகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நாட்டின் வேறெந்த மாநிலத்துக்கும் செய்யப்படவில்லை. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளோம்.
ஆந்திரா, பீஹார் ஆகிய மாநிலங்களுக்கு என்ன கொடுத்தனர் என்பதை மத்திய அமைச்சர் கூற வேண்டும். இவர்கள் நமக்கு பாடம் நடத்துகின்றனர்.
சி.பி.ஐ.,
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஊழலையாவது சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுத்திருந்தால், அதை சுட்டிக்காட்ட சொல்லுங்கள். இதை சி.பி.ஐ., விசாரணைக்கு வழங்கலாமா?
'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, என் மீது எந்த தவறும் இல்லை. இருப்பினும் மக்கள் மனதில் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் மூலம் விசாரணை நடத்தி வருகிறேன்.
தவறு செய்யாதபோது, நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? 'பிளாக்மெயில்' செய்வதிலும், பொய் சொல்வதிலும் பொய்களை உண்மையாக மாற்றுவதிலும் பா.ஜ., சளைத்ததல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.