காகிதமில்லா ஊதிய முறை அடுத்த மாதம் மாநகராட்சி அமல்
காகிதமில்லா ஊதிய முறை அடுத்த மாதம் மாநகராட்சி அமல்
காகிதமில்லா ஊதிய முறை அடுத்த மாதம் மாநகராட்சி அமல்
ADDED : ஜூன் 13, 2024 02:19 AM

ஜந்தர் மந்தர்:தன்னுடைய ஊழியர்களுக்கு காகிதமில்லா ஊதிய முறையை மாநகராட்சி அடுத்த மாதம் முதல் அமல்படுத்துகிறது.
மாநகராட்சியின் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஜூன் மாத ஊதியம், காகிதமில்லா முறையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து பணியாளர்களிடம் இருந்தும் தேவையான ஆவணங்களை மாநகராட்சி பெற்றுள்ளது.
இதுகுறித்து டில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நிதி விவேகத்தை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள ஊதியத் தொகுதியைப் பயன்படுத்தி சில மாற்றங்களுடன் காகிதமில்லா ஊதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜூலை மாதம் குரூப் ஏ, பி, சி ஊழியர்கள் இந்த முறையில் சம்பளம் பெறுவர். இதைத் தொடர்ந்து குரூப் டி பிரிவு ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும்.
காகித பயன்பாட்டை குறைக்கவும் பணிகளை மேம்படுத்தவும் இந்த செயல்முறை பின்பற்றப்பட உள்ளது. சம்பளம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இனி காகிதமற்ற முறையிலேயே வழங்கப்படும்.
அத்துடன் இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வு பெறுதல் உள்ளிட்ட அனைத்து ஆணைகளும் கூட காகிதமற்ற முறையிலேயே கணக்கியல் பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும்.
பணி நியமன ஆணைகள், பிற நிர்வாக ஆணைகள் உள்ளிட்ட அனைத்தும் கணினியில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.