அண்ணிக்கு மறுவாழ்வு கொடுத்தவர் சுட்டுக்கொலை
அண்ணிக்கு மறுவாழ்வு கொடுத்தவர் சுட்டுக்கொலை
அண்ணிக்கு மறுவாழ்வு கொடுத்தவர் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 16, 2024 01:20 AM
பாக்பத்:உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவருக்கு சுக்வீர், ஓம்வீர், உதய்வீர் மற்றும் யஷ்வீர்,32. ஆகிய நான்கு மகன்கள்.
இதில், மூத்த மகன சுக்வீர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.
அவரது மனைவி ரிதுவை, யஷ்வீர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது, மற்ற இரு அண்ணன்களான ஓம்வீர் மற்றும் உதய்வீர் ஆகிய இருவருக்கும் பிடிக்கவில்லை.
நேற்று முன் தினம் இரவு இந்தத் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மது போதையில் இருந்த ஓம்வீர் மற்றும் உதய்வீர் ஆகியோர், தம்பி யஷ்வீரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
போலீசார், இருவரையும் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.