கோடை கால செயல் திட்டம் நாளை முதல் அமல்
கோடை கால செயல் திட்டம் நாளை முதல் அமல்
கோடை கால செயல் திட்டம் நாளை முதல் அமல்
ADDED : ஜூன் 14, 2024 02:23 AM

புதுடில்லி:தேசிய தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கோடைகால செயல் திட்டம், நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:
நகர அரசாங்கம் கோடை கால செயல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது முக்கியமாக மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.
இன்று 30 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தினோம். கோடைகால செயல் திட்டத்தில் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். நாளை (இன்று) முதல் செப்டம்பர் 15 வரை கோடைகால செயல் திட்டத்தில் 12 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி அரசு செயல்படும்.
பசுமையாக்கும் துறைகள், தங்கள் செயல்திட்டங்களைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை மாசுபாட்டில் தூசித் துகள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அனைத்து துறைகளும் இணைந்து ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை தூசு எதிர்ப்பு பிரசாரத்தை நடத்தும். இதற்காக, 580 ரோந்து குழுக்கள் ஆய்வு செய்து, கட்டுமான இடங்களில் தூசு தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.