Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது நாளாக தர்ணா

திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது நாளாக தர்ணா

திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது நாளாக தர்ணா

திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது நாளாக தர்ணா

ADDED : ஜூன் 28, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலுடன் இணைந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காலியாக இருந்த பாராநகர் மற்றும் பகவன்கோலா சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

இதில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ரயத் ஹுசைன் சர்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவரும் கவர்னர் மாளிகைக்கு வந்து பதவிப்பிரமாணம் செய்துகொள்ள, கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் திரிணமுல் காங்கிரஸ் தரப்போ, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சபாநாயகர் அல்லது துணை சபாநாயகருக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதுதான் மரபு எனக் கூறியது.

இதையடுத்து, சட்டசபைக்கு வந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் கடந்த இரு தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே டில்லி சென்றுள்ள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் இதுகுறித்து கூறுகையில், ''பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் பணியை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அரசியலமைப்பு எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

''சட்டசபையை இதற்கான இடமாக நிர்ணயிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

''ஆனால், இது தொடர்பாக சபாநாயகர் எழுதிய கடிதம் கவர்னர் மாளிகையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளதால், அங்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது சாத்தியமில்லை,'' எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us