Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

ADDED : ஆக 02, 2024 02:06 AM


Google News
பிந்தாபூர்:கனமழை காரணமாக தென்மேற்கு டில்லியின் பிந்தாபூர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.

புதன்கிழமை இரவு 7:30 மணி அளவில் டியூஷன் முடிந்து சிறுவன் வீடு திரும்பும் வழியில் நடந்துள்ளது. தரையில் இருந்து துண்டிக்கப்பட்ட மின்சார கேபிள்கள் அடங்கிய இரண்டு பிளாஸ்டிக் குழாய்களை போலீசார் மீட்டனர்.

மற்றொரு சம்பவத்தில், தென்கிழக்கு டில்லியின் மிதாபூர் பகுதியில் உள்ள பிரபாத், 28, என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

புதன்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, பிரபாத் தன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கு அவர் தண்ணீர் தொட்டி அருகே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால், மின்சாரம் பாய்ந்தற்கான சரியான காரணத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.

இந்த இரு சம்பவங்களும் கன மழை பெய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us