Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மரக்கன்றுகளுடன் நிலத்தை தானம் செய்த 'வள்ளல்'

மரக்கன்றுகளுடன் நிலத்தை தானம் செய்த 'வள்ளல்'

மரக்கன்றுகளுடன் நிலத்தை தானம் செய்த 'வள்ளல்'

மரக்கன்றுகளுடன் நிலத்தை தானம் செய்த 'வள்ளல்'

ADDED : ஜூன் 02, 2024 05:49 AM


Google News
மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், மனமும் இருந்தால் எந்த வகையிலும் தொண்டு செய்யலாம் என்பதை, கோலாரின் வள்ளல் ஒருவர் நிரூபித்துள்ளார். இவரது சேவையால் பலரும் பயன் அடைந்துஉள்ளனர்.

இன்றைய அவசர யுகத்தில், அவரவர் வாழ்க்கையை நடத்துவதற்கு ஓட வேண்டியுள்ளது. இத்தகைய வேளையில் மற்றவரை பற்றி சிந்திக்க நேரம் இருப்பது இல்லை; மனமும் இல்லை.

ஆனால் இவர்களுக்கு இடையிலும், மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மனங்கள் உள்ளன. மண்ணில் இன்னும் ஈரம் உள்ளது என்பதற்கு, உதாரணமாக திகழ்கின்றனர். இதில் சிக்க சித்தப்பாவும் ஒருவர். இவரை, மாணவர்கள் இன்றைக்கும் நினைவுகூர்கின்றனர்.

கோலார் சீனிவாசபுராவின் அவலகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்க சித்தப்பா. தன் கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது, அவரது கனவாக இருந்தது.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த இவர், சிறார்களுக்கு கல்வி கற்பிக்க விரும்பினர். கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்ட, 1962ம் ஆண்டில், 10 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.

பொதுவாக நன்கொடையாளர்கள் பள்ளி, கல்லுாரிகள் கட்ட காலி நிலத்தை தானம் செய்வது வழக்கம். ஆனால் சிக்க சித்தப்பா வெறும் நிலத்தை மட்டும் தரவில்லை.

நிலத்தை சுற்றிலும் மா கன்றுகளை நட்டிருந்தார். அந்த கன்றுகள் தற்போது மரமாக வளர்ந்து, பள்ளிக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாயை அளிக்கிறது. பள்ளிக்கு நிரந்தரமாக வருவாய் கிடைக்க வேண்டும். இது பள்ளி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பது, சிக்க சித்தப்பாவின் எண்ணமாக இருந்தது.

இதற்காக இவர் நட்டு வைத்த மாமரங்கள், இன்று பலன் அளிக்கின்றன. மாம்பழம் சீசனில் அமோகமாக விளைகிறது.

இதை பள்ளி நிர்வாகிகள் ஏலம் விடுகின்றனர். இதில் கிடைக்கும் வருவாயை, பள்ளி வளர்ச்சிக்கு செலவிடுகின்றனர்.நடப்பாண்டு மாம்பழங்களை ஏலம் விட்டதில், 5.2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. தொகையில் ஒரு பங்கு பள்ளிக்கு ஒதுக்கப்படுகிறது.

மிச்ச தொகையை மாந்தோப்பை பராமரிக்கும் நபருக்கு வழங்கப்படுகிறது.

சிக்க சித்தப்பாவின் சேவை, மற்றவருக்கு முன் உதாரணமாக உள்ளது.- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us