ADDED : ஜூன் 13, 2024 02:21 AM
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று தேசிய தலைநகரில்ஆர்ப்பாட்டம்செய்தனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை போராட்டம் நடத்தின. பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்அனைவரும் வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.