நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்: அனுராக் தாக்கூர் சொல்கிறார்!
நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்: அனுராக் தாக்கூர் சொல்கிறார்!
நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்: அனுராக் தாக்கூர் சொல்கிறார்!
ADDED : ஜூன் 01, 2024 10:41 AM

சிம்லா: 'பா.ஜ., தொண்டர்கள் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் அனுராக் தாக்கூர் மற்றும் அவரது தந்தையும், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமாலும் ஓட்டளித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அனுராக் தாக்கூர் கூறியதாவது: மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனைவரும் நல்லாட்சி அமைய ஓட்டளிக்க வேண்டும். பா.ஜ., தொண்டர்கள் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.
மக்கள் ஜனநாயகத்தின் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையைப் பயன்படுத்த வேண்டும். வளர்ச்சியைப் பேணுவதில் நமது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.