ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?: திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா சர்ச்சை பேச்சு
ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?: திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா சர்ச்சை பேச்சு
ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?: திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா சர்ச்சை பேச்சு
ADDED : ஜூலை 01, 2024 05:38 PM

புதுடில்லி: ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு? என திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா மொய்த்ரா லோக்சபாவில் பேசுகையில் குறிப்பிட்டார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து, லோக்சபாவில், மஹூவா மொய்த்ரா பேசியதாவது: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம் தான் செங்கோல். ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?.
எதிர்க்கட்சிகளை பா.ஜ., எதுவும் செய்ய முடியாது. நீங்கள் (பா.ஜ.,) மைனாரிட்டி ஆகிவிட்டீர்கள் என்பதை இன்றும் உணரவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. பெண்களைக் கண்டு பா.ஜ., அச்சப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
ரத்தக்கறை
கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த முறை என்னை பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை. ஒரு எம்.பி.,யின் குரலை நசுக்கியது. அதற்கு ஆளும் கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் 63 பேரை பொதுமக்கள் நிரந்தரமாக உட்கார வைத்தனர். மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது. அங்கு பிரதமர் மோடி நேரில் செல்லாதது ஏன்?. இவ்வாறு அவர் பேசினார்.