ADDED : செப் 12, 2025 07:47 AM

நாராயண்பூர்: பல் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய, 16 நக்சல்கள் சத்தீஸ்கரின் நாராயண்பூரில் போலீசார் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.
நக்சல்களுக்கு உணவுபொருள், மருந்து சப்ளை செய்தல், வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் சப்ளை செய்வது, கண்ணிவெடிகளை புதைத்து வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்ட இவர்கள், நக்சல்களின் வெற்று சித்தாந்தங்களில் வெறுப்படைந்து சரண் அடைந்ததாக தெரிவித்தனர். இவர்களுக்கு மாநில அரசு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியது.