Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல்'

 'அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல்'

 'அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல்'

 'அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல்'

ADDED : டிச 05, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி, : அமெரிக்காவில் இருந்து, 18,822 இந்தியர்கள் கடந்த 15 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை அந்நாட்டு அரசு, நாடு கடத்தி வருகிறது. நம் நாட்டை சேர்ந்தவர்களும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் தற்போது நடக்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:

மனித கடத்தல் குறித்து மாநில அரசுகள் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரிக்கின்றன. கடந்த 2009 முதல், 18,822 இந்தியர்கள் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதில், 2023ல் மட்டும், 617 இந்தியர்களும், கடந்த ஆண்டில் 1,368 பேரும் நாடு கடத்தப்பட்டனர். இந்த ஆண்டில் ஜனவரி முதல், 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதில் 2,032 பேர் வர்த்தக விமானத்திலும், மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்றத் துறையினரின் தனி விமானத்திலும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

நம் நாட்டில், மனித கடத்தல் தொடர்பான, 27 வழக்குகளை விசாரிக்கும் என்.ஐ.ஏ., இது தொடர்பாக 169 பேரை கைது செய்துள்ளது. இதில், 132 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித கடத்தலில் ஈடுபட்ட இரு முக்கிய நபர்களை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கடந்த ஆக.,7ல் என்.ஐ.ஏ., கைது செய்தது. அக்., 2ல் ஹிமாச்சலில் மேலும் இருவரை அந்த அமைப்பு கைது செய்தது.

மாநில அரசுகளை பொறுத்தவரை, பஞ்சாபில் அதிக மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத பயண ஏஜன்ட்கள் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us