டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

புதைந்தன
தொடர் மழையால், டார்ஜிலிங்கில் மிரிக் - சுகியோபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதையில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. சேறும், சகதியும் நிறைந்துள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த வீடுகளும், கடைகளும் மண்ணில் புதைந்தன. சர்சாலி, மிரிக் பஸ்தி, ஜாஸ்பிர்கான், தர் காவ்ன், நாக்ரகாட்டா பகுதி களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், மிரிக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில், 11 பேர் பலியாகினர்; 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ரயில் சேவை பாதிப்பு
அதேபோல், மழை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜல்பைகுரி, சிலிகுரி, டார்ஜிலிங்கில் மினி ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அரசு வேலை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பார்வையிட உள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில், 'மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பேரழிவு துரதிர்ஷ்டவசமானது. நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.


