கேரளாவில் கனமழை; 2 மாடி கட்டடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சோகம்!
கேரளாவில் கனமழை; 2 மாடி கட்டடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சோகம்!
கேரளாவில் கனமழை; 2 மாடி கட்டடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சோகம்!
ADDED : ஜூன் 27, 2025 11:16 AM

திருவனந்தபுரம்: தொடர் கனமழை காரணமாக கேரள மாநிலம், திருச்சூர் கொடகரை பகுதியில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், வட மாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் இன்று(ஜூன் 27) அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டது. எர்ணாகுளம். இடுக்கி, கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக கேரள மாநிலம், திருச்சூர் கொடகரை பகுதியில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. உள்ளூர்வாசிகள், போலீசார் மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கி வட மாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். குடியிருப்பாளர்கள் வேலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.
அவர்களில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பினர். பலியானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராகுல் (19), ரூபெல் (21) மற்றும் அலீம் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.