"என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்": 4வது நாளாக அடம்பிடிக்கும் அதிஷி
"என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்": 4வது நாளாக அடம்பிடிக்கும் அதிஷி
"என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்": 4வது நாளாக அடம்பிடிக்கும் அதிஷி
ADDED : ஜூன் 24, 2024 04:14 PM

புதுடில்லி: 'டில்லி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வரை, என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்' என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி ஈடுபட்டுள்ளார்.
4வது நாளான இன்று(ஜூன் 24) எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிஷி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது உடல் எடை குறைந்துவிட்டது. உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஹரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன். டாக்டர்கள் எனது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.