டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை
டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை
டில்லி என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை
ADDED : அக் 23, 2025 08:05 AM

புதுடில்லி: டில்லியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
டில்லி ரோகிணி பகுதியில் அதிகாலை 2.20 மணிக்கு, போலீசார் நடத்திய என்கவுன்டரில்
குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள், ரவுடிகள் ரஞ்சன் பதக், 25, பிம்லேஸ் மக்தோ,25, மணிஷ் பதக்,33, மற்றும் அமன் தாக்கூர், 21, ஆவர்.
இவர்கள் மீது பீஹார் மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைநகர் டில்லியில் குற்றவாளிகள் கும்பல் நடமாட்டம் குறித்து உளவுத்துறை அளித்த தகவல்படி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டில்லியின் கரவால் நகரை சேர்ந்த அமன் தாக்கூரை தவிர மற்ற 3 பேரும் பீஹாரின் சீதாமர்ஹியில் வசித்து வந்துள்ளனர். பீஹாரில் தேர்தலுக்கு முன்பு, இந்த 4 பேரும் மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டி வந்து இருக்கின்றனர்.
இந்த 4 பேரையும் டில்லி மற்றும் பீஹார் போலீசார் இணைந்து சுட்டுக்கொன்று மிகப்பெரிய சதி செயலை முறியடித்தனர்.


