யமுனை நதியில் மூழ்கி 4 சிறுமியர் உயிரிழப்பு
யமுனை நதியில் மூழ்கி 4 சிறுமியர் உயிரிழப்பு
யமுனை நதியில் மூழ்கி 4 சிறுமியர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 03, 2025 08:49 PM
ஆக்ரா:ஆக்ரா அருகே யமுனை நதியில் குளித்த நான்கு சிறுமியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே நாக்லா நாது கிராமத்தைச் சேர்ந்த திவ்யா,14, சந்தியா,12, ஷிவானி,17, நைனா, 14, மற்றும் சோனம், முஸ்கன் ஆகிய ஆறு சிறுமியரும் நேற்று காலை 10:00 மணிக்கு, யமுனை நதியில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கினர்.
அங்கு குளித்துக் கொண்டிருந்த திபேஷ் என்பவர் ஆற்றில் குதித்து சோனம் மற்றும் முஸ்கன் ஆகிய இருவரை மீட்டு கரையில் சேர்த்தார். மற்றவர்களை மீட்பதற்குள் ஆழத்தில் மூழ்கி விட்டனர். நான்கு பேர் உடல்களை தேடும் பணி நடக்கிறது.
ஆக்ரா மாவட்ட கலெக்டர் அரவிந்த் மல்லப்பா பங்காரி, “இது மிகவும் துயரமான சம்பவம். மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உடல் விரைவில் கண்டுபிடிக்கப்படும்,”என்றார்.