Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/4 மாத குழந்தைக்கு கொரோனா; குடும்பத்தினருக்கு தொற்று இல்லாத நிலையில் குழப்பம்

4 மாத குழந்தைக்கு கொரோனா; குடும்பத்தினருக்கு தொற்று இல்லாத நிலையில் குழப்பம்

4 மாத குழந்தைக்கு கொரோனா; குடும்பத்தினருக்கு தொற்று இல்லாத நிலையில் குழப்பம்

4 மாத குழந்தைக்கு கொரோனா; குடும்பத்தினருக்கு தொற்று இல்லாத நிலையில் குழப்பம்

Latest Tamil News
காசியாபாத்: உ.பி.,யில் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு தொற்று எப்படி வந்தது ஆச்சரியமானதாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் கொரோனா தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காணப்படுகிறது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

கொரோனா அறிகுறிகளுடன் காணப்படுவோர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில், உ.பி.,யில் மெஹ்ராலி என்ற பகுதியில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த குழந்தையின் வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா தொற்றோ அல்லது அதற்கான அறிகுறிகளோ இல்லாதது தான்.

எப்படி இது சாத்தியம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது;

கொரோனா பாதிக்கப்பட்ட பச்சிளம்குழந்தைக்கு 2 நாட்களாக லேசான சளி, காய்ச்சல் இருந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வழக்கமான காய்ச்சலாக இருக்கும் என்று வீட்டில் உள்ளவர்கள் எண்ணியுள்ளனர்.

அதன் பின்னர், நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனைக்கு கொண்டு சென்ற போது, கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதுபற்றி காசியாபாத்தில் உள்ள சுகாதாரத்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட, யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று இல்லாத நிலையில், 4 மாத பச்சிளம் குழந்தை எப்படி கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் என்று என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் எப்படி குழந்தையை தாக்கி இருக்கும் என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us