Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிறுமி பலாத்கார வழக்கில் 51 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் 51 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் 51 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் 51 ஆண்டு சிறை

ADDED : பிப் 29, 2024 08:49 PM


Google News
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடுக்கி மாவட்டம், பூப்பாறையில் திருமணம் ஆன பெண்ணுடன் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப், 40, வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் 17 வயது மகளை, 2018 நவம்பரில் அனுப் பலாத்காரம் செய்தார். அதை வெளியில் கூறினால் தாய், மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். சாந்தாம்பாறை போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். போலீசார் அனுப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சிராஜூதீன், போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் அனுப்க்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் உத்தரவிட்டார். தவறினால் மேலும் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us