67 வயதில் மலையாளத்தில் பட்டம்; பாலக்காடு அருகே பெண் சாதனை
67 வயதில் மலையாளத்தில் பட்டம்; பாலக்காடு அருகே பெண் சாதனை
67 வயதில் மலையாளத்தில் பட்டம்; பாலக்காடு அருகே பெண் சாதனை
ADDED : ஜூன் 11, 2025 08:43 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, பி.ஏ., மலையாளம் பட்டம் பெற்று 67 வயதான பெண் சாதித்துஉள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருத்தாலா தண்ணீர்க்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.
இவர், 67வது வயதில், பி.ஏ., மலையாளம் பட்டம் பெற்றுள்ளார். கல்வி கற்க வயது ஒரு தடையே இல்லை. ஆர்வம் இருந்தால் போதும், எந்த வயதிலும் பட்டப்படிப்பு படிக்கலாம் என, நிரூபித்துள்ளார்.
இது குறித்து, விஜயலட்சுமி கூறியதாவது:
பள்ளி படிப்பு காலத்தில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியால், இரண்டாவது முறை எழுத கூட முடியாத வாழ்க்கை சூழல் இருந்தது. அதனிடையே, ஆந்திராவில் வியாபாரம் செய்யும் சங்கரன் என்பவருடன் திருமணம் ஆனது. பிறகு கணவனுடன் ஆந்திராவில் வாழ்க்கை நகர்ந்தது. கணவர் இறந்த பின், மூன்று குழந்தைகளுடன் ஊருக்கு திரும்பி வந்தேன்.
23 ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். இதற்கிடையே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் ஆசை எழுந்தது.
கடந்த, 2017ல் விண்ணப்பித்து, 2018ல் தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றேன். தொடர்ந்து, பிளஸ்--2 தேர்விலும் சிறந்த மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றேன்.
இதையடுத்து ஆசிரியர்களின் அறிவுரையின்படி, கோழிக்கோடு பல்கலையில், தொலைதுாரக்கல்வியில் பி.ஏ., மலையாளம் படித்தேன். எனது, 67வது வயதில், மலையாள மொழியில் பட்டம் பெற்றேன். அதே பல்கலையில், முதுகலை படிப்பில் சேர தயாராகி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.