லால்பாக் மலர் கண்காட்சியில் ஒரே நாளில் 96,500 பார்வையாளர்கள்
லால்பாக் மலர் கண்காட்சியில் ஒரே நாளில் 96,500 பார்வையாளர்கள்
லால்பாக் மலர் கண்காட்சியில் ஒரே நாளில் 96,500 பார்வையாளர்கள்
ADDED : ஜன 27, 2024 11:08 PM
பெங்களூரு: பெங்களூரு லால்பாக்கில் 215வது லால்பாக் மலர் கண்காட்சியில், குடியரசு தினத்தன்று ஒரே நாளில், 96,500 பேர் பார்வையிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தை ஒட்டி, தோட்டக்கலை துறை சார்பில் 18ம் தேதி, 215வது மலர் மற்றும் பழக்கண்காட்சி துவங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இதில், வெளிநாட்டு மலர்களான எபஷன்ஸ், பெட்டூனியா, ஜெரனியம், ஜெர்பரா, செவாண்டிகே, கெலாஞ்சோ, சால்வியா உள்ளிட்ட இந்தோ - அமெரிக்கன் கலப்பின மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பழம், மலர் கண்காட்சியில் மொத்தம் 68 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ரோஜா, பலாப்பழம், லட்டுப் பூ என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அல்லமபிரபு, அக்கமஹாதேவி, இஷ்டலிங்கம் மலர்களால் கட்டப்பட்டுள்ளன. அதுபோன்று அனுபவ மண்டபம் மூன்று வகையான ரோஜா, நான்கு வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், குடியரசு தினமான நேற்று முன்தினம் ஒரே நாளில், 96,500 பேர் பார்வையிட்டுள்ளனர்.
இன்றுடன் மலர் கண்காட்சி நிறைவடைகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.
பள்ளி சீருடை அணிந்த மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் இலவசம். பெரியவர்களுக்கு 80 ரூபாயும்; குழந்தைகளுக்கு 30 ரூபாயும் டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.