Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கடலோர பகுதியில் இருந்து நேரடி ரயில் உடுப்பி மடாதிபதியிடம் வேண்டுகோள்

கடலோர பகுதியில் இருந்து நேரடி ரயில் உடுப்பி மடாதிபதியிடம் வேண்டுகோள்

கடலோர பகுதியில் இருந்து நேரடி ரயில் உடுப்பி மடாதிபதியிடம் வேண்டுகோள்

கடலோர பகுதியில் இருந்து நேரடி ரயில் உடுப்பி மடாதிபதியிடம் வேண்டுகோள்

ADDED : ஜன 10, 2024 12:04 AM


Google News
உடுப்பி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. வரும் நாட்களில் ராமர் கோவிலை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே உடுப்பியில் இருந்து, அயோத்திக்கு நேரடி ரயில் இணைப்பு ஏற்படுத்தும்படி வேண்டுகோள் வந்துள்ளது.

கர்நாடக கடலோர பகுதியின், உடுப்பி, குந்தாபுராவில் இருந்து அயோத்திக்கு நேரடி ரயில் இணைப்பு அளிக்கும்படி, ஸ்ரீராம ஜென்ம பூமி திருத்தல டிரஸ்டின் பெஜாவர் மடத்தின் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கடலோர ரயில்வே நலன் பாதுகாப்பு கூட்டமைப்பினர், விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளிடம் விடுத்த வேண்டுகோள்:

இந்திய ரயில்வேத் துறை, அயோத்தியின் ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து, அயோத்திக்கு நேரடி ரயில் போக்குவரத்தை துவக்கியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் இருந்தும், நேரடி ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோன்று, கடலோர பகுதிகளின் பக்தர்கள், அயோத்திக்குச் செல்ல வசதியாக, உடுப்பி, குந்தாபுராவில் இருந்து நேரடி ரயில் போக்குவரத்தைத் துவக்க வேண்டும். தட்சிண கன்னட எம்.பி., நளின்குமார் கட்டீல், உடுப்பி - சிக்கமகளூரு எம்.பி., ஷோபா, மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், “இதுதொடர்பாக, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவேன். தொலைபேசியில் பேசுவேன்,” என, உறுதி அளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us