திராட்சை நிலத்தில் 'பேடகி மிளகாய்' பயிரிட்டு அறுவடை செய்த விவசாயி
திராட்சை நிலத்தில் 'பேடகி மிளகாய்' பயிரிட்டு அறுவடை செய்த விவசாயி
திராட்சை நிலத்தில் 'பேடகி மிளகாய்' பயிரிட்டு அறுவடை செய்த விவசாயி
ADDED : ஜன 27, 2024 11:02 PM

சில நேரங்களில் ஒரு பயிரிட்ட நிலத்தில், வேறு செடிகளை பயிரிடுவது கஷ்டம். ஆனால், விஜயபுராவை சேர்ந்த விவசாயி ஒருவர், திராட்சை பயிரிடப்பட்ட நிலத்தில், 'பேடகி மிளகாய்' பயிரிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
விஜயநகரா மாவட்டம், டிகோட்டாவின் கல்காவடகி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு மாலி. இவர், பாபா நகரில் உள்ள தன் 5 ஏக்கர் நிலத்தில் 'பேடகி மிளகாய்' பயிரிட்டுள்ளார்.
இதுகுறித்து குரு மாலி கூறியதாவது:
கொப்பாலுக்குச் சென்றிருந்தபோது 'பேடகி மிளகாய்' பயிரிடப்பட்டிருந்ததை பார்த்தேன். குறைந்த செலவில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
பின் ஊர் திரும்பியபோது, அடவிபாவி கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர் மல்லப்பாவின் ஆலோசனைப்படி, ஹெப்பலஹட்டி நர்சரியில் இருந்து மரக்கன்றுகள் வாங்கி வந்தேன்.
ஏக்கருக்கு 12,000 மரக்கன்றுகள் வீதம், 5 ஏக்கருக்கு 60,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தற்போது, 1 ஏக்கரில் 2 டன் மிளகாய் விளைகிறது. குறைந்தபட்சம் 1 கிலோ 150 ரூபாய்க்கு விற்றாலும், 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். 5 ஏக்கருக்கு, 9 முதல் பத்து டன் விளைகிறது. இதனால், 15 லட்சம் ரூபாய் வருவாய்கிடைக்கிறது.
1 ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 5 ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் செலவு போனாலும், மீதி 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
தற்போது, 7 டன் விளைச்சல் வந்துள்ளது. பேடகி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல தயார் செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிளகாயை வெயிலில் உலர வைக்கும் விவசாயி குரு மாலி. இடம்: விஜயபுரா.
-- நமது நிருபர் -