'ஐபோன் - 17'ஐ முதல் நாளே வாங்க குவிந்த ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு
'ஐபோன் - 17'ஐ முதல் நாளே வாங்க குவிந்த ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு
'ஐபோன் - 17'ஐ முதல் நாளே வாங்க குவிந்த ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு
ADDED : செப் 20, 2025 02:41 AM

மும்பை: 'ஆப்பிள்' நிறுவனத்தின் புதிய மாடலான, 'ஐபோன் - 17 சீரிஸ் மொபைல் போன்' விற்பனை நேற்று துவங்கியது.
முதல் நாளே அதை வாங்க டில்லி, மும்பை, பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள 'ஆப்பிள் ஸ்டோர்'களில் அதிகாலை முதல் நீண்ட வரிசை காணப்பட்டது.
முன்னணி நிறுவனமான 'ஆப்பிள்' புதிய ஐபோன் சீரிஸ், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றின் தயாரிப்புகளை செப்டம்பரில் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்தாண்டுக்கான புதிய மாடலான 'ஐபோன் - 17 சீரிஸ்' மற்றும் 'ஐபோன் ஏர்' என்ற இரண்டு புதிய மொபைல் போன்கள் நேற்று விற்பனைக்கு வந்தன. மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி கடை உள்ளது.
இங்கு, அதிகாலை முதலே நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் கூடினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; பாதுகாவலர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டில்லி, பெங்களூரு நகரங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஐபோனை ரசிகர்கள் வாங்கி சென்றனர். ஐபோன் 17 சீரிஸ், 82,900 ரூபாயில் துவங்கி 2,29,900 ரூபாய் வரை வகைக்கு ஏற்ப விலை நிர்ணயித்துள்ளனர்.