
மைசூரு பாணி
மைசூரு நகருக்கு வரும் சுற்றுலா பயணியரில், வெளிநாட்டவரே அதிகம். இவர்கள் மைசூரு அரண்மனை, மிருகக்காட்சி சாலை, கே.ஆர்.எஸ்., பிருந்தாவன், சாமுண்டி மலை உட்பட, பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர். மைசூரு பாணி உணவு, சிற்றுண்டியை சாப்பிட விரும்புவர்.
பாரம்பரிய உணவு
மைசூரின் பாரம்பரிய உணவுகள், அதன் சிறப்பு குறித்து, ஏற்கனவே புத்தகத்தில் படித்திருந்த வெளிநாட்டு தம்பதி, ஒரு முறையாவது அந்த உணவை சாப்பிட்டே ஆக வேண்டும் என, ஆர்வம் குறையவில்லை.
மைசூரின் பெருமை
தன் வீட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு, வாழை இலையில் சசிகலா மைசூரு பாக், சாதம், சாம்பார், சப்பாத்தி, மைசூரு பாணியில் சட்னி, புளியோதரை, ஊறுகாய், துவையல் உட்பட, விதவிதமான உணவுகளை பரிமாறுகிறார். இதன்மூலம் வெளிநாடுகளில் மைசூரின் பெருமையை உணர்த்தும் சேவையை சத்தமில்லாமல் செய்கிறார்.
விருந்தோம்பல்
இத்தகைய சிறப்பான விருந்தோம்பல், வெளி நாட்டவரின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.