டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
ADDED : ஜூன் 09, 2025 05:34 PM

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வஜீர்பூர் மற்றும் நியூ சப்ஸி மண்டி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 16 பேர் மற்றும் குழந்தைகள் 30 பேர் ஆவர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் அடையாள ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.டில்லியில் சமீப காலமாக சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதமாக வசித்து வரும் வங்கதேசத்தினர் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.