Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; கோல்கட்டா ஓடுபாதையில் 1 மணி நேரம் நிறுத்தி வைப்பு

Latest Tamil News
காசியாபாத்: காசியாபாத், கோல்கட்டா ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான ஓடுபாதையிலேயே 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து காசியாபாத்திற்கு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக விமானம் புறப்படவில்லை.

கிட்டத்தட்ட 1 மணிநேரத்துக்கும் அதிகமாக விமான ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மேலேழும்பாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன கோளாறு என்பதை கண்டறியும் பணியில் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

கோல்கட்டா, ஹிண்டன் விமானம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்டவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 270 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களில் மீண்டும் ஏர் இந்தியா விமானம் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us