'அமேசான்' நிறுவன பொருட்கள் கொள்ளை
'அமேசான்' நிறுவன பொருட்கள் கொள்ளை
'அமேசான்' நிறுவன பொருட்கள் கொள்ளை
ADDED : செப் 22, 2025 12:11 AM

சாகர்: மத்திய பிரதேசத்தில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 'அமேசான்' நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
'இ - காமர்ஸ்' எனப்படும், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை நாடு முழுதும் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
கப்பல் மற்றும் விமானங்களில் வரும் பொருட்கள், லாரிகள் வாயிலாக பல்வேறு பகுதி களுக்கு எடுத்து செல்லப் படுகின்றன.
இதேபோல், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி, ஹரியானாவின் குர்கானில் இருந்து மஹாராஷ்டிராவின் நாக்பூருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் வழியாக அந்த சரக்கு லாரி சென்ற போது, சிலர்பூர் கிராமம் அருகே, ஆயுதமேந்திய நான்கு மர்ம நபர்கள் வழி மறித்தனர். டிரைவரை மிரட்டி, அந்த லாரியை யாரும் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்ற அவர்கள், லாரியில் இருந்த பொருட்களை கொள்ளைஅடித்தனர்.
பின்னர், டிரைவரை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் வேறு வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
டிரைவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து அமேசான் நிறுவனம் அறிவிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.