சிறையில் இருந்தே சுயேட்சையாக வென்ற அம்ரித்பால்சிங்
சிறையில் இருந்தே சுயேட்சையாக வென்ற அம்ரித்பால்சிங்
சிறையில் இருந்தே சுயேட்சையாக வென்ற அம்ரித்பால்சிங்
ADDED : ஜூன் 04, 2024 08:07 PM

அமிர்தசரஸ்: சிறையில் இருந்து கொண்டே சுயேட்சையாக போட்டியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங் வெற்றி பெற்றார்.
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருப்பவர் அம்ரித்பால்சிங் கடந்தாண்டு பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டிய வழக்கில் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இதில் அம்ரித்பால் சிங் 3 லட்சத்து 68 ஆயிரத்து 560 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் குல்பிர்சிங்ஜிரா 1 லட்சத்து 96 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 1 லட்சத்து 72 ஆயிரத்து 281 வாக்குகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளரை தோற்கடித்தார்.