Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போலீஸ் உதவி கமிஷனர் கட்டாயப் பணி ஓய்வு

 போலீஸ் உதவி கமிஷனர் கட்டாயப் பணி ஓய்வு

 போலீஸ் உதவி கமிஷனர் கட்டாயப் பணி ஓய்வு

 போலீஸ் உதவி கமிஷனர் கட்டாயப் பணி ஓய்வு

ADDED : டிச 01, 2025 03:03 AM


Google News
திருப்பூர்: நிலுவை குற்றச்சாட்டு தொடர்பாக, திருப்பூர் போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்த சந்திரசேகரன் கட்டாயப் பணி ஓய்வு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகர போலீசில் குற்ற ஆவணக் காப்பக பிரிவு உதவி கமிஷனராக சந்திரசேகரன் என்பவர், கடந்த மாதம் 26ம் தேதி பொறுப்பேற்றார். அதற்கு முன், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் டி.எஸ்.பி.யாக இருந்து, திருப்பூருக்கு இடமாறுதலில் வந்தார்.

பொறுப்பேற்ற மறுநாளே உதவி கமிஷனர் சந்திர சேகரனை கட்டாய பணி ஓய்வு செய்து, உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். உத்தரவு நகல் சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டது.

போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ''சந்திரசேகரன், இதற்கு முன் பொருளாதார குற்றப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாற்றி உள்ளார். தர்மபுரியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்துள்ளார். அப்போது அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு, அதற்கான 'பனிஷ்மென்ட்' நிலுவையில் இருந்தது. இதன் எதிரொலிதான், கட்டாயப்பணி ஓய்வு உத்தரவு'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us