Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 விண்வெளி பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 விண்வெளி பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 விண்வெளி பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 விண்வெளி பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

ADDED : ஜூன் 18, 2025 11:35 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் ஆக்சிம் ஸ்பேஸ் என்ற நிறுவனமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 2022ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இதுவே உலகின் முதல் தனியார் விண்கலம் என்ற பெயரை பெற்றது. அந்த வகையில் ஆக்சிம் 4 என்னும் பெயிரல், 4வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, போலந்தின் ஸ்லோவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

மே 29ம் தேதி புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்படும் டிராகன் விண்கலத்தில் பயணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜூன் 8, ஜூன் 10 ஆகிய தேதிகளுக்கு பயணத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு அதுவும் பிறகு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 5வது முறையாக மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வானிலையில் நிலவும் மாற்றம், விண்வெளி வீரர்களின் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுபான்ஷூ சுக்லாவின் ஆக்சிம் 4 பயணம் ஜூன் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us