Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பறவை காய்ச்சல் பாதிப்பு நீங்கியது டில்லி உயிரியல் பூங்கா விரைவில் திறப்பு

பறவை காய்ச்சல் பாதிப்பு நீங்கியது டில்லி உயிரியல் பூங்கா விரைவில் திறப்பு

பறவை காய்ச்சல் பாதிப்பு நீங்கியது டில்லி உயிரியல் பூங்கா விரைவில் திறப்பு

பறவை காய்ச்சல் பாதிப்பு நீங்கியது டில்லி உயிரியல் பூங்கா விரைவில் திறப்பு

ADDED : அக் 09, 2025 03:16 AM


Google News
புதுடில்லி:“பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் முற்றிலும் இல்லை என உறுதி செய்யப்பட்டதால், டில்லி தேசிய உயிரியல் பூங்கா விரைவில் திறக்கப்படும்,” என, பூங்கா இயக்குநர் சஞ்சீத் குமார் கூறினார்.

இதுகுறித்து, சஞ்சீத் குமார் கூறிய தாவது:

டில்லி சர்வதேச உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பரவி, ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து, ஆகஸ்ட் 30ம் தேதி பூங்கா மூடப்பட்டது. பூங்கா முழுதும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு, விலங்குகளுக்கு அடிக்கடி பரிசோதனை நடத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடம் மாதிரி எடுத்து அனுப்பப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை 7ம் தேதி கிடைத்தது. பரிசோதனை அறிக்கைப்படி எந்த விலங்குக்கும் பறவைக் காய்ச்சல் அறிகுறி இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களின் பார்வைக்காக டில்லி உயிரியல் பூங்காவை மீண்டும் திறக்க, மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பூங்கா திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக. 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை அடுத்தடுத்து 12 பறவைகள் உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்ததில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும் டில்லி உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பரவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us