புதிய சாதனையை நிகழ்த்த பா.ஜ., - ம.ஜ.த., சபதம் கோலார் தொகுதியில் தொண்டர்கள் வேகம்
புதிய சாதனையை நிகழ்த்த பா.ஜ., - ம.ஜ.த., சபதம் கோலார் தொகுதியில் தொண்டர்கள் வேகம்
புதிய சாதனையை நிகழ்த்த பா.ஜ., - ம.ஜ.த., சபதம் கோலார் தொகுதியில் தொண்டர்கள் வேகம்
ADDED : பிப் 12, 2024 06:30 AM

லோக்சபா தேர்தலுக்கு கால அட்டவணை வெளியிட நாட்கள் நெருங்கி கொண்டுள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள சேதிய கட்சிகள் தயார் நிலையில் உள்ளன.
கோலார் லோக்சபா தொகுதி பா.ஜ., வசம் இருந்து வருகிறது. இத்தொகுதியில் 28 ஆண்டுகள் காங்கிரசை அசைக்க முடியவில்லை. அக்கட்சியை, 2019 ல் பா.ஜ., வீழ்த்தியது. விரைவில் நடக்க உள்ள தேர்தலிலும் கூட தொகுதியை தக்க வைக்க முடியும் என்று அக்கட்சி திடமான நம்பிக்கையுடன் உள்ளது.
கோலார் மணிக்கூண்டு மீது, தேசியக் கொடியதை தனது வாழ்நாள் சாதனையாக பா.ஜ., - எம்.பி., முனிசாமி பெருமையாக கருதுகிறார். கோலார் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபைத் தொகுதிகளிலும் தனது ஐந்து ஆண்டுகளின் வளர்ச்சி பணிகள் குறித்து வாத, விவாதங்களுக்கு தயார் என்கிறார்.
புதிய மறுமலர்ச்சி
குறிப்பாக ரயில்வே துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பங்கார் பேட்டை முதல் மாரிகுப்பம் வரையில் எல்லா ரயில் நிலையங்களுமே நவீன மயம் ஆக்கப் பட்டுள்ளன.
கொரோனா நேரத்தில் தங்கவயலுக்கு வர வேண்டிய ஆக்சிஜன் பிளான்ட் வெளி மாநிலத்துக்கு செல்ல விடாமல் தடுத்து தங்கவயலுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
தங்கச் சுரங்க நிறுவனத்தின் மூடிகிடந்த மருத்துவமனையை சீர்படுத்தி, கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக உயிர்ப்பித்தார் என பணிகளை முன்னிறுத்துகிறார்.
வரும் தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளதால் இத்தொகுதியை இருவருமே எதிர்பார்க்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, ம.ஜ.த.,வுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இரு கட்சிகளும் பம்பரமாக சுற்றி வருகின்றன. இரு கட்சியினரும் மோதுவர் என எதிர்பார்த்துள்ள காங்கிரசுக்கு ஏமாற்றம் தான்.
கோலாரில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், பெரும்பாலான தொகுதிகளில் ம.ஜ.த.,வும், சில தொகுதிகளில் பா.ஜ.,வும் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.
காங்கிரசின் பிரச்சாரத்திற்கு 'ஸ்பீடு பிரேக்' ஆக பா.ஜ., தான் உள்ளது என்பது அக்கட்சியினரின் கருத்து.
ம.ஜ.த., வினரும் கூட, 'எங்கள் பிரதமர் நரேந்திர மோடி' என்ற முழக்கத்துடன் தான் கிளம்பி உள்ளனர்.
ஒருங்கிணைப்பு
இதுவரை பா.ஜ.,வில் சீட் கேட்டு யாரும் அணி உருவாக்கவில்லை. ம.ஜ.த.,வில் மூன்று பேர் தயாராக உள்ளனர். இதில் யாருக்கு கொடுத்தாலும், ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்து உள்ளனர்.
கோலார் தொகுதியின் வெற்றியை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில், இரு கட்சிகளும் கை கோர்த்துள்ளது முக்கியமான விஷயமாகும்.
புதிய சாதனையை நிகழ்த்த சபதம் எடுத்து, இரு கட்சிகளும் களத்தில் இறங்கி உள்ளன.
வெற்றி நிச்சயம்
உலகளவில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரின் தலைமையில் நடக்கும் நல்லாட்சி தொடர வேண்டும். அதற்கு கோலார் தொகுதியும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் திட்டங்கள், ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றடைந்துள்ளது. இதற்கு கோலார் எம்.பி., முனிசாமி சேவையும் சாட்சி. எங்களுக்கு வெற்றி நிச்சயம்.
கமல்நாதன்,
தலைவர், தங்கவயல் நகர பா.ஜ.,
எங்கள் வேட்பாளர் மோடி!
கோலார் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் யார் என்பது எங்களுக்கு முக்கியமே இல்லை. எங்களின் ஒரே வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி தான். எனவே இத்தொகுதியை தேசபக்தியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வது எங்களின் கடமையாகும். இதில் எந்த தடங்கலும் இல்லை.
-- வெங்கடேஷ், முன்னாள் தலைவர்
தங்கவயல் நகர பா.ஜ.,
அயோத்தி ராமர் சாதனை!
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி இருந்தாலும் யாருக்கு என்ற பிரச்னையே இல்லை. கோலாரில் 1.90 லட்சம் சிறுபான்மையினர், 2.5 லட்சம் எஸ்.சி., 3 லட்சம் குருமா, 2 லட்சம் ஒக்கலிகர்கள் ஓட்டுகள் உள்ளன. எப்படி கணக்கு போட்டாலும் கூட்டணிக்கு தான் வெற்றி. மேலும் சாதகமாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை, நாட்டுக்கு தேவை.
-கோபால், முன்னாள் தலைவர்,
தங்கவயல் நகர பா.ஜ.- நமது நிருபர் -,