ADDED : ஜன 27, 2024 11:20 PM
ராம்நகர்: ராம்நகர் டவுனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பின்புறம், ரயில் தண்டவாளம் உள்ளது. தண்டவாளத்தை ஒட்டி கடந்த 26ம் தேதி 6 வயது சிறுவன் இறந்து கிடந்தான். இதுகுறித்து ராம்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்த சிறுவன் உடல் அருகில் 17 வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் விசாரித்தபோது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, சிறுவனை கொன்றது தெரிந்தது. கொலையாளியான சிறுவன் கைது செய்யப்பட்டான்.
கொலை செய்யப்பட்ட சிறுவன் யார் என்று தெரியவில்லை. சாக்லெட் தருவதாக கூறி, சிறுவனை அழைத்து வந்து கொன்றது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.