ADDED : மார் 16, 2025 04:50 AM
தங்கவயல்: ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 5 கிலோ அரிசிக்கு மாற்றாக வழங்கப்பட்ட பணம் நிறுத்தப்பட்டு, மீண்டும் அரிசி வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக அறிவித்தனர்.
ஆனால், தேவைக்கேற்ப அரிசி கையிருப்பு இல்லாததால், ஐந்து அரிசிக்கு பதிலாக, ஒரு கிலோவுக்கு 37 ரூபாய் வீதம் 185 ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
பிப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அரிசி வழங்கப்படுவதால், அதற்கான பணத்தை நிறுத்திவிட்டனர்.
கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கும் பணியை தங்கவயலில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா துவக்கி வைத்தார்.