சந்திரபாபு நாயுடு மனைவி முதலீடு செய்த நிறுவன ‛‛பங்குகள் '' கிடுகிடு உயர்வு
சந்திரபாபு நாயுடு மனைவி முதலீடு செய்த நிறுவன ‛‛பங்குகள் '' கிடுகிடு உயர்வு
சந்திரபாபு நாயுடு மனைவி முதலீடு செய்த நிறுவன ‛‛பங்குகள் '' கிடுகிடு உயர்வு
UPDATED : ஜூன் 07, 2024 07:40 PM
ADDED : ஜூன் 07, 2024 07:31 PM

புதுடில்லி: முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவி முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைகிறது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இவரது மனைவி நாரா புவனேஸ்வரி என்பவர் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் 24 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. இதன் மூலம் ஹெரிடேஷ் புட்ஸ் நிறுவனத்தின் நிரக லாபம் 5 நாட்களில் ரூ. 579 கோடியாக உயர்ந்தது.
முன்னதாக ஒட்டு எண்ணிக்கை தினமான ஜூன் 04- ம் தேதியன்று இந்திய பங்குச்சந்தைகள் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி பெரும் வீழ்ச்சி அடைந்தன. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் மனைவி முதலீடு செய்திருந்த பங்கின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 31ம் தேதி ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 402.90 ஆக இருந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து உயர்ந்து இன்று பங்கு விலை ரூ.660 வரை உயர்ந்தது.