மாநில தேர்தல்களில் வியூகம் மாறும்: காங்கிரஸ் திட்டம்
மாநில தேர்தல்களில் வியூகம் மாறும்: காங்கிரஸ் திட்டம்
மாநில தேர்தல்களில் வியூகம் மாறும்: காங்கிரஸ் திட்டம்
ADDED : ஜூலை 04, 2024 04:34 PM

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலை போன்று, ஒரே பார்முலாவாக இல்லாமல் இண்டியா கூட்டணி, மாநில சட்டசபை தேர்தல்களில் வெவ்வேறு விதமான வியூகத்தை பின்பற்றும்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, ஜெயராம் ரமேஷ் அளித்த பேட்டி: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது. டில்லியிலும் சட்டசபை தேர்தலில், எங்களுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியே கூறியிருக்கிறது.
லோக்சபா தேர்தலை போன்று, ஒரே பார்முலாவாக இல்லாமல் இண்டியா கூட்டணி, மாநில சட்டசபை தேர்தல்களில் வெவ்வேறு விதமான வியூகத்தை பின்பற்றும். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பும், மாநிலங்களில் கூட்டணியாக சட்டசபை தேர்தலை சந்திப்போம்.
மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் (சரத்சந்திர பவார்) இணைந்து போட்டியிடுவோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உடன் கூட்டணியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.