Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கொரோனாவில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் ரேகா

கொரோனாவில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் ரேகா

கொரோனாவில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் ரேகா

கொரோனாவில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் முதல்வர் ரேகா

ADDED : அக் 12, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:கொரோனா தொற்று பரவல் காலத்தில், களத்தில் பணியாற்றி கொரோனாவுக்கு பலியான 11 சுகாதாரத் துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் கருணைத் தொகையை முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.

கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா தொற்று, 2022ம் ஆண்டு வரை நீடித்தது. உலகமே முடங்கிக் கிடந்த நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறை உட்பட அரசின் பல்வேறு துறைகள் களத்தில் இறங்கி பணி களைச் செய்தனர்.

பணயம் ஏராளமான தன்னார்வலர்களும் களப்பணி செய்தனர். களத்தில் இருந்த பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரை தியாகம் செய்தனர்.

களத்தில் பணி செய்து கொரோனாவுக்கு பலியானோர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

டில்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டில்லியில் கொரோனா கட்டுப்பாட்டுப் பணியில் இருக்கும் போது பலியான 11 பேர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய்க்கான காசோலகை வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகமே ஸ்தம்பித்துக் கிடந்தபோது டில்லியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையை செய்தனர். அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு டில்லி மக்களை காப்பாற்றியது. உயிரைத் தியாகம் செய்து, தங்கள் கடமையை செய்த அந்தக் கர்மயோகிகளின் குடும்பத்தினருக்கு டில்லி அரசு துணை நிற்கிறது.

மன்னிப்பு தற்போது, 11 குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டில்லி அரசு இந்தக் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்.

இந்தத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய நிதியுதவி பற்று முந்தைய ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன் இந்த விவகாரதம் கவனத்துக்கு வந்தது.

உதவித் தொகை வழங்குவதை விரைவுபடுத்த அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய குழு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. முந்தைய அரசு செய்த தாமதத்துக்காக இந்தக் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us