ADDED : பிப் 25, 2024 02:43 AM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் உபல்வஸ் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
குடிசைக்குள் துாங்கிக் கொண்டு இருந்த பிரவீன், 7, மற்றும் சிங்கா, 5, துாங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும், அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் மீட்டனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள், சிங்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீ விபத்து நடந்த போது, பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.