இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து காங்., போராடும்: கார்கே
இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து காங்., போராடும்: கார்கே
இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து காங்., போராடும்: கார்கே
ADDED : ஜூலை 04, 2025 09:00 PM

ஹைதராபாத்: ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும்,'' என அக்கட்சி தலைவர் கார்கே கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் கார்கே பேசுகையில், பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தவறானது. அது எதிரிகளை உருவாக்குகிறது. பிரதமர் இதுவரை 42 வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். ஆனால், மக்கள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு இதுவரை செல்லவில்லை.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, சமூக கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார ரீதியிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறி உள்ளது.ஹைதராபாத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது.
பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், எங்கிருந்து 42 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர முடியும். அதற்கு ஒப்புதல் கிடைக்குமா?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும். அரசியல் சாசனத்தில் இருந்து மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை நீக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.