ADDED : பிப் 04, 2024 11:22 PM
கைதி 'எஸ்கேப்'
கதக் சல்லுார் கிராமத்தின் சையது, 25. திருட்டு வழக்கில் துமகூரு குப்பி போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கையில் விலங்கு அணியாமல், போலீஸ் நிலையத்தில் அமர வைத்திருந்தனர். நேற்று அதிகாலை போலீசார் அயர்ந்து துாங்கிய போது, போலீஸ் நிலையத்தில் இருந்து சையது தப்பி சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கைது
உத்தர கன்னடா எல்லாபுரா தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., வி.எஸ்.பாட்டீல். இவரது மகன் பாபுகவுடா பாட்டீல். கடந்த 2011 ல் குடிபோதையில் போலீசாரை தாக்கியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாபுகவுடா மீது வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் பதுங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
