போதை பார்ட்டி விவகாரம் : நடிகை ஹேமா கைது
போதை பார்ட்டி விவகாரம் : நடிகை ஹேமா கைது
போதை பார்ட்டி விவகாரம் : நடிகை ஹேமா கைது
UPDATED : ஜூன் 03, 2024 08:09 PM
ADDED : ஜூன் 03, 2024 08:01 PM

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற போதை பார்ட்டி விவகாரத்தில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் கடந்த மே 20ம் தேதி போதை பார்ட்டி நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது உறுதியானது. இதில் கலந்து கொண்ட தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. இதற்கு அவர்கள் மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் உள்பட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது.
இதையடுத்து போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக நடிகை ஹேமாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆஜராக நிலையில் இன்று நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.